தொடர்ந்து, மோட்சகுளம் பகுதியில், முதல்வரின் முகவரித்துறை சார்பில், “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமுக்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் தகவல் கையேடுகள் பொதுமக்களின் வீட்டுக்கே சென்று தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருவதை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து, கண்டமங்கலம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில், நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.3.76 கோடி மதிப்பீட்டில் 3 தளங்களாக 16 வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கண்டமங்கலம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் விதை இருப்பு மற்றும் உயிரி உரம் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், 5 விவசாயிகளுக்கு தலா ரூ.4 ஆயிரம் மதிப்பீட்டில் குறுவை தொகுப்புகளையும், வேளாண் பசுமை காடுகள் இயக்கத்தின் கீழ், 3 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளையும், 3 விவசாயிகளுக்கு மகாகனி மற்றும் செம்மரக்கன்றுகளையும் வழங்கினார்.
தொடர்ந்து, நவமால் மருதூர் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், நாற்றங்கால் பண்ணையில் பூவரசன், புளியமரம், சீத்தா, நாவல், கொய்யா, தேக்கு, மஹாகனி, புங்கை, பாதாம் மற்றும் தைலம் போன்ற 6,500 மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், கண்டமங்கலத்தில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், குடும்ப அட்டைதாரரர்களுக்கு நடப்பு மாதத்துக்கு வழங்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் இருப்புகள் குறித்த பதிவேடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சீனிவாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பிரேமலதா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாலாஜி, உதவி பொறியாளர் பொன்னி, தனி தாசில்தார் (குடிமைப்பொருள்) ஆனந்தன், கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் வெங்கடேசன், இளநிலை பொறியாளர் இக்பால், கண்டமங்கலம் தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரசேகர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post கண்டமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை விழுப்புரம் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.
