சென்னை: குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 4,922 மையங்களில், டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடைபெற்று வருகிறது. 3,935 பணியிடங்களுக்கு நடைபெறும் இந்த தேர்வை 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். இந்நிலையில் சென்னையில் தேர்வு மையத்தில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் 311 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 4,922 மையங்களில் குரூப் 4 போட்டி தேர்வு நடைபெறுகிறது.
தேர்வுத்தாள் தயார் செய்து ரகசியமாக கொண்டு செல்ல வேண்டிய நிலை, மதுரையில் மட்டும் ஒருசில பிரச்சினைகள் இருந்தது, மற்ற இடங்களில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. மாவட்ட அலுவலர், வட்டாட்சியர் ஆகியோர் பரிசோதித்த பின் அனுப்பப்படுகிறது. கடந்தாண்டு 10,000 பேரும், நடப்பாண்டில் தற்போது வரை 11,000க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 7 தேர்வுகளை அறிவித்து அதில் 5 தேர்வுகளை முடித்துள்ளோம். குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும். வரும் நாட்களில் 10,000 காலி பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெறும் என்று கூறினார்.
The post குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் பேட்டி appeared first on Dinakaran.
