×

மீன்வள கூட்டுறவு இணையம் மூலம் பயனாளிகளுக்கு ரூ.22 லட்சம் நலத்திட்ட உதவி

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு செயலாளர் தலைமையில் தேசிய மீன்வளர்ப்போர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் சிறந்த மீன் வளர்ப்போர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் மீனவ மகளிரின் பொருளாதாரத்தை உயர்த்திடும் நோக்கில் தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மூலம் நுண்கடன் வழங்கும் “அலைகள்” திட்டம் மற்றும் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.22.74 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், பஞ்சாயத்து குளங்களில் மீன்உற்பத்தியை அதிகரித்திட, மீன் மீன் வளர்ப்போர்களுக்கு மீன்விரலிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மீனவர்கள், மீன் வளர்ப்போர் மற்றும் மீனவ கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post மீன்வள கூட்டுறவு இணையம் மூலம் பயனாளிகளுக்கு ரூ.22 லட்சம் நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.

Tags : Fisheries Cooperative Network ,Chennai ,National Fishermen's Day ,Tamil Nadu government ,Commissioner ,Fisheries and Fishermen's Welfare ,Government of Animal Husbandry, Dairying, Fisheries and Fishermen's Welfare ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரத்தில் பறவைகளால்...