அப்பெண்ணுக்கு 40 வயதுடைய உறவினரை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்ததால் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இருவரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நெருக்கமாக இருந்துள்ளனர். சம்பவம் நடந்த போது கல்லூரியில் 2ம் ஆண்டு படித்த அந்த பெண்ணுக்கு வயது 18. அவர் மைனர் இல்லை. எனவே, தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் பெண் 18 வயது பூர்த்தியடையாதவராக இருக்க முடியாது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண், மைனர் என்று சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. எனவே, போக்சோ சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து, மதன் குமாரை நீதிமன்றம் விடுதலை செய்கிறது என்று தீர்ப்பளித்தார்.
The post மைனர் பெண் என்று தவறாக கூறி போக்சோ வழக்கு காதலனுக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.
