நெல்லை: சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குருபூஜையை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மகாராஷ்டிரா கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பல்கலைக்கழகங்களில் காவி புகுத்தப்படவில்லை. காவி என்பது இந்த மண்ணுக்கு சொந்தமானது. இப்போது மட்டுமல்ல வாஜ்பாய் காலத்தில் இருந்தே காவி, பல்கலைக்கழகத்தில் புகுத்தப்படுவதாக அரசியல் கட்சியினர் பேசி வருகின்றனர். காவி என்பது அரசியலுக்கான நிறமல்ல. அது பற்றற்ற தன்மையை குறிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post காவி என்பது இந்த மண்ணுக்கு சொந்தம்: கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.