×

5வது மகளிர் டி20யில் இன்று புத்தெழுச்சி பெற்ற இந்தியா மலர்ச்சி இழந்த இங்கிலாந்து

பர்மிங்காம்: இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகள் இடையிலான கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதுவரை நடந்த 4 ஆட்டங்களில் 3ல் வென்று 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது; மேலும், இங்கிலாந்து மண்ணில் 2வது முறையாக தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய பெண்கள் அணியும், பியுமன்ட் தலைமையிலான இங்கிலாந்து அணியும் இன்று 5வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் களமிறங்குகின்றன. பர்மிங்காமில் நடைபெற உள்ள இந்த ஆட்டத்தில் வெல்வதன் மூலம் இந்தியா 4-1 என்ற கணக்கில் வரலாற்று வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி தொடரை வெல்ல வாய்ப்பு இல்லாவிட்டாலும் இங்கிலாந்துக்கு வெற்றி கிடைத்தால் இந்தியாவின் முன்னிலையை குறைக்க உதவும். கூடவே ஆறுதல் வெற்றியாகவும் அது அமையும்.

The post 5வது மகளிர் டி20யில் இன்று புத்தெழுச்சி பெற்ற இந்தியா மலர்ச்சி இழந்த இங்கிலாந்து appeared first on Dinakaran.

Tags : India ,5th Women's T20 ,England ,Birmingham ,T20 ,women's team ,Dinakaran ,
× RELATED ஜூனியர் மகளிர் உலக ஹாக்கி; ஸ்பெயின்...