×

கலப்பு இரட்டையர் பிரிவில் வெர்பீக், சினியகோவா சாம்பியன்

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் முதல் இறுதி ஆட்டமாக கலப்பு இரட்டையர் ஆட்டம் நடந்தது. அதில் செம் வெர்பீக் (நெதர்லாந்து) / கேத்ரினா சினியகோவா (செக் குடியரசு), ஜோ சாலிஸ்பெரி (பிரிட்டன்)/ லூசியா ஸ்டெஃபானி (பிரேசில்) ஆகியோர் மோதினர். இப்போட்டியில், செம்/சினியகோவா இணை 7-6 (7-3), 7-6 (7-3) என நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது.

* கார்லோஸ் அல்காரஸ் இறுதி போட்டிக்கு தகுதி
விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் நேற்று ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் மோதினர். இப்போட்டியில் 6-4, 5-7, 6-3, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்ற அல்காரஸ் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

The post கலப்பு இரட்டையர் பிரிவில் வெர்பீக், சினியகோவா சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Verbeek ,Siniakova ,London ,Wimbledon Grand Slam tennis ,Sem Verbeek ,Netherlands ,Katerina Siniakova ,Czech Republic ,Jo Salisbury ,Britain ,Lucia Stefani ,Brazil ,Dinakaran ,
× RELATED ஜூனியர் மகளிர் உலக ஹாக்கி; ஸ்பெயின்...