பாட்னா: பீகாரில் பணி நேரத்தில் பெண் போலீசார் நகைகள் மற்றும் கனமான ஒப்பனைப் பொருட்களை அணிந்துகொண்டு ரீல்ஸ் தயாரிப்பதைக் காட்டும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து பீகார் ஏடிஜிபி பங்கஜ் தரத் பிறப்பித்த உத்தரவில்,’ பீகார் பெண் போலீசார் மற்றும் பெண் அதிகாரிகள் பணி நேரத்தில் லிப்ஸ்டிக், பவுடர் மற்றும் நகைகள் அணியக்கூடாது. பணியில் இருக்கும்போது ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்துவதும், சீருடையை முறையற்ற முறையில் அணிவதும் சேவை விதிகளை மீறுவதாக உள்ளது. சமூக ஊடகங்களுக்காக ரீல்களை உருவாக்குதல் மற்றும் ஆயுதங்களைக் காட்சிப்படுத்துதல், பணியில் இருக்கும்போது இசை அல்லது தனிப்பட்ட அழைப்புகளுக்கு புளூடூத் சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துதல் ஆகியவையும் விதிமீறல்கள் ஆகும். ரீல்ஸ் வெளியிட்ட 10 பெண் கான்ஸ்டபிள்கள் மற்றும் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவு ஆண் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கும் பொருந்தும்மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பீகார் அரசு அதிரடி உத்தரவு லிப்ஸ்டிக், பவுடர் போட பெண் போலீசாருக்கு தடை: நகைகளும் அணியக்கூடாது appeared first on Dinakaran.