மகாத்மாகாந்தி வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்காததை கண்டித்து பெண்கள் சாலை மறியல்

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்தில் சரிவர வேலை வழங்காததை கண்டித்து பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.மூங்கில் துறைப்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சரிவர வேலை தரவில்லை எனக்கூறி திருவரங்கம் -மூங்கில் துறைப்பட்டு சாலையில் வாணியம்பாறை பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர் சிரஞ்சீவி, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக வேலை வழங்குவதாகவும், தேவையான அடிப்படை வசதி செய்து தருவதாகவும் கூறியதன் பேரில் சாலை மறிலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post மகாத்மாகாந்தி வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்காததை கண்டித்து பெண்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: