திருப்பூர் : அவிநாசியில் புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் கைதான மாமியார் சித்ராதேவியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது திருப்பூர் நீதிமன்றம்.ஜாமின் வழங்க எதிர்ப்புத் தெரிவித்து ரிதன்யாவின் பெற்றோர் இடையீட்டு மனுத் தாக்கல் செய்திருந்தனர். ஏற்கனவே கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.