- திருவையாறு தியாகராஜர்
- சுவாமி
- பூர்ணிமா
- திருவையாறு
- திருவையாறு தியாகராஜர் சுவாமி
- குரு பூர்ணிமா
- தியாகராஜர்
- ஆசிரமம்
- பரம்பரை பூஜை ஸ்தானிகர் தியாகராஜ சர்மா
- சென்னை
- ரஞ்சனி ஸ்ரீனிவாசன்
- ஆராதனா
திருவையாறு, ஜூலை 11: திருவையாறு தியாகராஜர் ஆஸ்ரமத்தில் குரு பூர்ணிமாவை முன்னிட்டு தியாகராஜர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பரம்பரை பூஜா ஸ்தானிகர் தியாகராஜ சர்மா சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை செய்தார். சென்னை ரஞ்சனி சீனிவாசன் குடும்பத்தினர் மற்றும் ஆஸ்திக சமாஜ பக்தர்கள், இசைக் கலைஞர்கள் தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ழுழுநிலவு நாள் குரு பூர்ணிமாவை முன்னிட்டு சீடர்கள் தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை போற்றும் முகமாக இசை கடவுளான தியாகராஜ சுவாமியை வழிபட்டு குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்தனர். குரு பூர்ணிமாவை துறவிகள் வியாசபூசை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
The post திருவையாறு தியாகராஜர் சுவாமிக்கு குரு பூர்ணிமா அபிஷேக, ஆராதனை appeared first on Dinakaran.
