×

புதுவிடுதி கிராமத்தில் மரத்தில் விஷவண்டு தீயணைப்புத்துறை மூலம் தீயிட்டு அழிப்பு

 

கறம்பக்குடி, ஜூலை 11: கறம்பக்குடி அருகே புதுவிடுதி கிராமத்தில் வீட்டின் அருகே மரத்தில் இருந்த விஷ வண்டுகளை தீயணைப்புத்துறையினர் அழித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே புதுவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் விவசாயி. இவருக்கு சொந்தமான வீட்டின் அருகே இருந்த மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்துள்ளன. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து தீயணைப்பு நிலை அலுவலர் பொறுப்பு கருப்பையா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று உயிர் சேதம் ஏற்படாமல் விஷ வண்டுகளை அழித்தனர். இதனையடுத்து தீயணைப்புத்துறை அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர்.

 

The post புதுவிடுதி கிராமத்தில் மரத்தில் விஷவண்டு தீயணைப்புத்துறை மூலம் தீயிட்டு அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Fire department ,Puduvudithi ,Karambakudi ,Fire ,Karthikeyan ,Pudukkottai district ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...