வரும் செப்டம்பரில் நடக்கிறது 1996 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு: ஆக. 12ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு மேனிலைப் பள்ளிகளில் தற்போது 1996 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பாடவாரியாக தமிழ் 216, ஆங்கிலம் 197, கணக்கு 232, இயற்பியல் 233, வேதியியல் 217, தாவரவியல் 147, விலங்கியல் 131, வணிகவியல் 198, பொருளியல் 169, வரலாறு 68, புவியியல் 15, அரசியல் அறிவியல் 14, கணினி பயிற்றுநர் (நிலை 1) 57, உடற்கல்வி இயக்குநர் (நிலை 1) 102 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் இணைய தளம் மூலம் ஜூலை 10ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய காலஅவகாசம் வழங்கப்படுகிறது. எனவே, மேற்கண்ட தகுதியுள்ள பட்டதாரிகள் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் போது உரிய விவரங்களை சரிபார்த்து அதற்கு பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். இந்த அறிவிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்கள் அனைத்தும் tnbgrievances@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். செப்டம்பர் மாதம் 28ம் தேதி தேர்வு நடைபெறும்.

 

The post வரும் செப்டம்பரில் நடக்கிறது 1996 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு: ஆக. 12ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: