இதுதொடர்பாக முதல்வர் பகவந்த்மான் கூறுகையில்,’ ரூ.10 லட்சம் வரை பணமில்லா சிகிச்சையை வழங்கும் முதல் மாநிலமாக பஞ்சாப் மாறியுள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கப்படும். இதற்கான சுகாதார அட்டைகள் சேவை மையங்கள் அல்லது பொது சேவை மையங்களில் வழங்கப்படும். குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் ஐடியைப் பயன்படுத்தி ஆன்லைனில் பதிவு செய்து சுகாதார அட்டையைப் பெறலாம். இந்தத் திட்டத்திற்காக இதுவரை 550க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை 1,000 ஆக அதிகரிக்கப்படும். முன்பு, ஒரு குடும்பம் ரூ.5 லட்சம் வரை மட்டுமே சிகிச்சை பெற முடியும். தற்போது அந்த வரம்பு ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.778 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றார்.
The post பஞ்சாப் அரசு அதிரடி அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.10 லட்சம் மருத்துவ காப்பீடு: அக்.2 முதல் தொடக்கம் appeared first on Dinakaran.
