அந்நேரம் அந்த மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு லாரி, இரண்டு வேன், ஒரு ஆட்டோ போன்றவை ஆற்றில் விழுந்தது. அதில் இருந்தவர்கள் ஆற்றில் விழுந்து உதவி கேட்டு கூச்சலிட்டனர். ஒரு டேங்கர் லாரி இடிந்து விழுந்த மேம்பாலத்தில் பாதி வெளியில் வந்த நிலையில் கீழே விழும் வகையில் ஊசலாடிக் கொண்டிருந்தது. மேம்பாலம் இடிந்துவிழுந்தபோது அதில் இரு இருசக்கர வாகனங்களும் சென்றது உறுதிபடுத்தப்பட்டு இருக்கிறது. அவை தண்ணீரில் மூழ்கி இருக்கிறதா என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மேம்பாலம் இடிந்து விழுந்த பகுதி அதிக ஆழம் கொண்டது கிடையாது. எனவே மீட்புப்பணியில் பெரிய அளவில் பிரச்னை ஏற்படவில்லை. பாலம் இடிந்து விழுவதற்கு முன்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்டபோது பெரிய சத்தம் வந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினரும், போலீஸாரும், பேரிடர் மீட்புப்படையும் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
The post ராத்தில் பாலம் உடைந்து வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்த விபத்து: பலி 16ஆக உயர்வு appeared first on Dinakaran.
