சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு..!!

சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நாடு முழுவதும் சூதாட்ட செயலிகளில் ஏராளமானோர் பணம் இழந்து வருகின்றனர். அதிலும் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனை அடுத்து அத்தகைய செயலிகளுக்கு விளம்பரம் தருவதிலும், ஊக்கப்படுத்துவதையும் தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு சட்டவிரோத செயல் மற்றும் பெட்டிங் செய்வதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவளிப்பவர்களுக்கு நடவடிக்கை எடுக்கும்படி நுகர்வோர்த்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. ஆன்லைன் மூலம் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்,

கடந்த மார்ச் மாதம் சூதாட்ட செயலிகளில் விளம்பரப்படுத்தியதாக நடிகர் பிரகாஷ் ராஜ், விஜய் தேவர்கொண்டா நடிகைகள் நிதி அகர்வால், மஞ்சு லட்சுமி, ஸ்ரீமுகி, பிரணிதா, வர்ஷினி, வசந்தி, கிருஷ்ணன் மற்றும் சில யூ டியூபர்கள் என 29 பேர் மீது ஒன்றிய அரசின் ஐ.டி சட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. தெலுங்கானா மாநில அரசிலும் , ஐதராபாத் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் மன்னிப்பு வீடியோ வெளியிட்டிருந்தனர். இருந்தபோதிலும் தற்போது இந்த சூதாட்ட வழக்கில் திரைபிரபலங்கள், யூ டியூபர்கள் என 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஐதராபாத் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

The post சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: