இவ்வழக்கில் 156 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 16 பேர் இன்னும் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பத்தப்பட்ட முக்கிய குற்றவாளி 28 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம் ஜெய்பூரில் தலைமறைவாக இருந்து வந்த டெய்லர் ராஜா என்று அழைக்கப்படக்கூடிய சாதிக் ராஜாவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர்.
இந்நிலையில் கைது நடவடிக்கை குறித்து மாநகர போலீசாரை உஷார் நிலையில் இருக்க மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர்கள் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டது. கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்த பின்பு விரிவான செய்தி அறிக்கையை வெளியிட போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
The post கோவையில் 1998-ல் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான குற்றவாளி 28 ஆண்டுகளுக்கு பின் கைது appeared first on Dinakaran.
