அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் கண்டெய்னர் லாரி மீது வேன் மோதி 3 பேர் உயிரிழந்தனர். மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் கண்டெய்னர் லாரியும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் இரு வாகனங்களின் ஓட்டுநர்களும், ஒரு கிளீனரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.