- ஈக்விடாஸ் பள்ளி
- கோயம்புத்தூர்
- எக்விடாஸ் குருகுல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
- சுந்தரபுரம்
- சிட்கோ
- தின மலர்
கோவை, ஜூலை 10: கோவை சிட்கோ தொழிற்சாலை வளாகத்தில் சுந்தராபுரம் பகுதியில் உள்ள எக்விடாஸ் குருகுல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில், போதைப்பொருள் ஒழிப்பின் அவசியத்தை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இப்பள்ளியானது சமூக, சுகாதார, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலத்திற்காக தொடர்ந்து பல செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
மாணவர்களிடம் சமூக விழிப்புணர்வை வளர்ப்பதற்காகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வுகளை நடத்துவதற்காகவும் எக்விடாஸ் பள்ளி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி போன்ற செயல்கள் மாணவர்கள் வழியாக சமூகத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்படுகின்றன. அதனை வலியுறுத்தும் வகையில் மாணவர்கள் உரை, நடனம் மற்றும் நாடகம் ஆகியவற்றின் மூலம், போதைப்பொருள் தீமையையும், வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும், பல்வேறு நன்மை, தீமைகளையும் எடுத்துக் கூறினர்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் சாந்தி வினோத் தலைமை வகித்து பேசுகையில், “மாணவர்கள் கல்விக்கு உட்பட்டவர்களாக மட்டுமல்லாமல், சமூகத்தில் பொறுப்பு மற்றும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியவர்களாகவும் தங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்” என வலியுறுத்தி போதை விழிப்புணர்வு குறித்த கருத்துரையும் வழங்கினார். இந்நிகழ்ச்சி, மாணவர்களின் சமூக பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் அமைந்ததோடு, மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் எக்விடாஸ் பள்ளி ஒரு சிறந்த சமூகப் பொறுப்புணர்வுக்கு முன் உதாரணமாக திகழ்கிறது என்றாா்.
The post எக்விடாஸ் பள்ளி மாணவர்களின் போதைப்பொருள் விழிப்புணர்வு appeared first on Dinakaran.
