கந்தர்வகோட்டை, ஜூலை 10: ‘ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும்’ என்பர் அந்த அளவிற்கு ஆடி காற்று கடுமையாக வீசும். ஆனால், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல், இரவு நேரங்களில் காற்று கடுமையாக வீசி வருகினறது. இதனால், வாழை, முருங்கை உள்ளிட்ட மரங்கள் ஓடிந்து பாதிக்கின்றன. மேலும், சாலையோரங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள், வீட்டின் கூரைகள் கூட பறக்கின்றன.
இதனால், பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிக்கின்றன. மேலும், சைக்கிளில், பைக்கில் செல்வோர் புழுதிக்காற்றால் பாதிக்கின்றனர். இதில், தமிழக அரசு கொடுத்து உள்ள சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சைக்கிளை ஓட்ட முடியாமல் தள்ளிக் கொண்டு சென்று சிரமமடைகின்றனர். காற்று அதிக அளவில் வீசுவதால், மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்படுகின்றன.
The post கந்தர்வகோட்டை பகுதியில் பலத்த காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் appeared first on Dinakaran.
