ஐதராபாத் தொழிலதிபரிடம் ரூ.3 கோடி மோசடி: போலி வைர வியாபாரிகளின் சொத்துகள் முடக்கம்

ஐம்மு: ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் பிராசத் அலி கான் கடந்த ஆண்டு பஹூ துறைமுக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரில் ஜம்முவை சேர்ந்த சில போலி வைரக்கற்களை காஷ்மீர் நீலக் கற்கள் எனக் கூறி ரூ.3கோடி மோசடி செய்துவிட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் ஜம்மு காஷ்மீர் ரஜவுரியை சேர்ந்த முகமது ராயல் மற்றும் பூஞ்ச் சுரன்கோட்டை சேர்ந்த முகமது தாஜ் கான் மற்றும் அவரது கூட்டாளிகள் பிராசத் அலிகானை ரூ.3கோடி ஏமாற்றியதோடு, போலி காஷ்மீர் நீலக் கல்லை மொத்தம் ரூ.25கோடிக்கு விற்க முயன்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.65 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தின் மூலமாக பாதிக்கப்பட்ட தொழிலதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் தற்போது மோசடி மூலமாக கிடைத்த வருமானத்தை பயன்படுத்தி குற்றம்சாட்டப்பட்டவர்கள் சம்பாதித்த சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

The post ஐதராபாத் தொழிலதிபரிடம் ரூ.3 கோடி மோசடி: போலி வைர வியாபாரிகளின் சொத்துகள் முடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: