×

எம்எல்சி டி20 லீக் வாஷிங்டனுக்கு வெற்றி மாலை வாரிக்கொடுத்த வான் மழை: இறுதி சுற்றுக்கு முன்னேறியது

டல்லாஸ்: மேஜர் லீக் (எம்எல்சி) கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்றின்போது மழை பெய்ததால், லீக் சுற்றில் முதலிடம் பிடித்திருந்த வாஷிங்டன் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. அமெரிக்காவில் நடைபெறும் டி20 தொடரான மேஜர் லீக் (எம்எல்சி) கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டம் நேற்று டல்லாசில் நடைபெற இருந்தது. லீக் சுற்றில் முதல் 2 இடங்களை பிடித்த வாஷிங்டன் ஃபிரீடம் – டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மோத தயாராகின.

ஆனால் போட்டி துவங்கும் முன்பே மழை பெய்ததால் தாமதமானது. தொடர்ந்து நீண்ட நேரம் கனமழை பெய்ததால் தகுதிச் சுற்று ரத்துச் செய்யப்படுவதாக எம்எல்சி நிர்வாகம் அறிவித்தது. மேலும், லீக் சுற்றில் முதலிடம் பிடித்ததால் வாஷிங்டன் அணி வெற்றிப் பெற்றதாக கருதப்பட்டு நேரடியாக ஜூலை 13ம் தேதி நடைபெற உள்ள இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. லீக் சுற்றில் 10 ஆட்டங்களில் ஆடிய வாஷிங்டன் 8 வெற்றிகள் மூலம் 16 புள்ளிகளை பெற்றிருந்தது.

அதே நேரத்தில் டெக்சாஸ், 7 வெற்றிகள் மூலம் 14 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்திருந்தது. இன்று நடைபெறும் வெளியேறும் சுற்றில் சான்பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் – எம்ஐ நியுயார்க் அணிகள் மோதுகின்றன. அதில் வெற்றி பெறும் அணி நாளை நடைபெறும் சவால் சுற்றில் டெக்சாஸ் அணியுடன் களம் காணும். அதில் வெற்றி பெறும் அணி பைனலில் வாஷிங்டன் அணியை சந்திக்கும்.

The post எம்எல்சி டி20 லீக் வாஷிங்டனுக்கு வெற்றி மாலை வாரிக்கொடுத்த வான் மழை: இறுதி சுற்றுக்கு முன்னேறியது appeared first on Dinakaran.

Tags : Von Rain ,MLC T20 League ,Washington ,Dallas ,Major League (MLC) cricket ,Major League (MLC) ,T20 ,United States ,Dinakaran ,
× RELATED ஜூனியர் மகளிர் உலக ஹாக்கி; ஸ்பெயின்...