இதை எதிர்த்து உயர்மட்ட நீதிமன்ற கவுன்சிலில் செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. கொலை வழக்கில் சிக்கி உள்ள நிமிஷா பிரியாவுக்கு, வரும் 16ம் தேதி துாக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அங்கு உள்ள சிறை நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் நிமிஷாவின் மரண தண்டனையை நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு மார்க்சிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.
அமைச்சர் ஜெய்சங்கருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், இந்த மரணதண்டனை குறித்த துயரமான செய்தி அவரது குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் மத்தியில் பதற்றத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இது இந்திய அரசின் உடனடி மற்றும் உயர்மட்ட அளவிலான தலையீட்டின் அவசியத்தை காட்டுகிறது. கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர், பழங்குடித் தலைவர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் பேசி அவருக்கு மன்னிப்பு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
The post மரண தண்டனையில் இருந்து கேரள நர்சை மீட்க வேண்டும்: வெளியுறவு அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் எம்பி கோரிக்கை appeared first on Dinakaran.
