மேட்டூர்: கர்நாடகா அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து 43,000 கனஅடியாக நீடிக்கிறது. அதே போல், மேட்டூர் அணைக்கு மணிக்கு விநாடிக்கு 42,250 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 42,250 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 5வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.
The post மேட்டூருக்கு நீர்வரத்து 42,250 கனஅடி appeared first on Dinakaran.