ஆய்வு கூட்டம் முடிந்த பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பரப்பரையில், 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பேசி வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர், ‘அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். அவர் 210 சொன்னதற்காக, நான் 220 சொல்ல வேண்டுமா? தமிழ்நாட்டு மக்கள்தான் முடிவு செய்வார்கள். நாங்கள் எங்கள் பணிகளை செய்து கொண்டுள்ளோம். முதலமைச்சர் மக்களை சந்தித்து கொண்டுள்ளார். எதிர்கட்சி தலைவர் அவரின் பணியை செய்து கொண்டிருக்கிறார்’ என்றார்.
இதைதொடர்ந்து கரூர் சுங்ககேட் அருகே உள்ள மஹாலில் மகளிர் சுய உதவி குழுவினருடன் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மகளிர் சுயஉதவி குழுவினருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார். பின்னர் கரூர் பிரேம் மஹாலில் திமுக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் சட்டமன்ற தேர்லில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் செயல்படும் விதம் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து கரூர் திருமாநிலையூரில் ரூ.40 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி நேற்று மாலை திறந்து வைத்ததோடு, ரூ.162 கோடி மதிப்பீட்டில் 18,331 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.
தொடர்ந்து விழாவில் ரூ.6.75 கோடியில் கட்டப்பட்ட கரூர் காமராஜர் மார்க்கெட், ரூ.1.55 கோடியில் வெங்கமேட்டில் புதிதாக கட்டப்பட்ட புதிய மீன் மார்க்கெட், ரூ.5.95 கோடியில் கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்ட அறிவியல் பூங்கா மற்றும் மாணவர்களின் அறிவியல் வளர்ச்சியை மேம்படுத்த சிறப்பு ஆய்வகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். பின்னர் கரூர் ராயனூர் தளபதி திடலில் திமுக பூத் கமிட்டி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் உதயநிதி பங்கேற்று பேசினார்.
The post எடப்பாடி போடும் கணக்குக்கு மக்கள் முடிவு சொல்வார்கள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.
