சென்னை: திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி வெளியிட்ட அறிக்கை: பாஜவின் பின் ஒழிந்துகொண்டு “கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்” என்ற திராவிட தத்துவத்தின் அடிப்படையில் விஷத்தைப் புகுத்தியிருக்கிறார் பிழைப்புவாதி எடப்பாடி பழனிசாமி. மக்கள் வரிப்பணத்தை மக்களுக்கே செலவு செய்வதுதான் உண்மையான அரசு. தமிழ்நாட்டின் வரலாறும் தெரியவில்லை. திராவிடத்தின் அடிநாதமும் எடப்பாடி பழனிசாமிக்கு புரியவில்லை. திராவிட இயக்கம் என்பதே கல்வி உரிமைக்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்தான் என்பதை வழியொட்டி தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊர்தோறும் கல்லூரிகள் திறந்து ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்ததைப் பொறுத்துக்கொள்ள முடியாத சங்கிக் கூட்டம் தன் ஏவலாளி அடிமை எடப்பாடியை தூண்டிவிட்டு அறநிலையத்துறை கல்லூரி கட்டியதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக் கனவைச் சிதைக்கும் அயோக்கியத்தனம் வேலையை சங்கி கூட்டம் செய்கிறது. திராவிட மாடல் அரசு கல்லூரிகள் திறப்பதை எதிர்க்கும் எடப்பாடிக்கு திமுக மாணவர் அணியின் வன்மையான கண்டனங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழக மாணவர்களின் கல்வி கனவை சிதைக்கும் வகையில் அயோக்கியத்தன வேலை செய்யும் பாஜ கூட்டம்: திமுக மாணவர் அணி கடும் கண்டனம் appeared first on Dinakaran.