சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி பெரம்பலூர், அரியலூர், தேனி, திருச்சி, ஒட்டன்சத்திரம், உடுமலை, திண்டுக்கல் ஆகிய மாவட்டகளின் இருந்து 400 டன் சின்ன வெங்காயம் வருவது வழக்கம். இந்நிலையில் சின்ன வெங்காயத்தின் சீசன் முடிந்ததால் வரத்து குறைந்ததால் நேற்ற கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 250 டன் குறைந்து சின்ன வெங்காயம் வந்தது. இந்நிலையில், 2 நாளுக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது வரத்து குறைவால் நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.50 இருந்து ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னை புறநகர் சில்லறை கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.70 இருந்து ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
The post கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை உயர்வு appeared first on Dinakaran.