×

குரும்பலூர் மஹா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

 

பெரம்பலூர், ஜூலை 9: பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் மஹா மாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. குரும்பலூர் கிராமத்தில் அருள்பாலித்து வரும் மஹா மாரியம்மன் கோயில் தேர்திருவிழா, கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி பூச்சொரிதல் மற்றும் ஜூலை 1ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
இதனையடுத்து நாள்தோறும் ெ பாங்கல் மாவிளக்கு பூஜையுடன் ஸ்வாமி திருவீதி உலா நடைபெற்றது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை 10:30 மணிக்கு மேல் 11:30 மணிக்குள்  மஹா மாரியம்மன் திருத்தேர் திரு விழா வடம் பிடித்தல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடை பெற்றது.
விழாவில்பேரூராட்சி தலைவர் சங்கீதா ரமேஷ், செயல் அலுவலர் தியாக ராஜன், இந்து சமய அறநிலையத் துறையின் பெரம்பலூர் சரக ஆய்வாளர் தீபலெட்சுமி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று மஞ்சள் நீராடுதல் விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது.

The post குரும்பலூர் மஹா மாரியம்மன் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Kurumbalur Maha Mariamman Temple Chariot ,Perambalur ,Maha Mariamman Temple ,Kurumbalur ,
× RELATED கீழப்பெரம்பலூர் அரசு பள்ளியில் பிளஸ்2...