அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா ரூ.48 லட்சம் மோசடி செய்ததாக புகார்: சுகாதாரத்துறை ஆய்வாளர் பணி வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு: ஏமாந்தவர் போலீசில் பரபரப்பு புகார்

சென்னை: திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்தார். இந்த வழக்கில் கோயிலுக்கு வந்த நிகிதா, நகையை அஜித்குமார் திருடியதாக கொடுத்த புகாரின் பேரில் இச்சம்பவம் நடைபெற்றது.இதற்கிடையே நிகிதா மீது வேலை வாங்கித் தருவதாக கூறி தமிழகம் முழுவதும் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக பலர் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் எழும்பூர் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் எழும்பூர் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (53) என்பவர் புகார் ஒன்று நேற்று அளித்தார். அதில், கடந்த 2011ல் அரசு வேலை வாங்கித் தருவதாக என்னிடமும் இருந்தும் எனது நண்பர்களிடமிருந்தும் ரூ.48 லட்சம் அவரது திருமங்கலம் ஆழப்பட்டி வீட்டிற்குச் சென்று காசோலை மூலமாக கொடுத்தேன். அதன் பின்னர் பல வருடங்கள் ஆகியும் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றிவிட்டார்.

இதனால் நான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்டேன். ஆனால் பணம் தராமல் ஏமாற்றி விட்டார். நான் நிகிதாவுக்கு கொடுத்த பணம் அனைத்தும் காசோலை மூலமாக கொடுத்தேன். இந்த மோசடியில் நிகிதாவின் தம்பி கவியரசு, அவரின் தாயார் சிவகாமி, அவரது தந்தை உள்ளிட்டோர் குடும்பமாக சேர்ந்து பணத்தை வாங்கினர்.

குறிப்பாக எனக்கு சுகாதாரத்துறை இன்ஸ்பெக்டர் பணியிடம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிவிட்டார். எனவே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.48 லட்சம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட நிகிதா, அவரது சகோதரர் கவியரசு, அவரது பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என தெரிவித்துள்ளார். அந்த புகாரின் மீது போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா ரூ.48 லட்சம் மோசடி செய்ததாக புகார்: சுகாதாரத்துறை ஆய்வாளர் பணி வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு: ஏமாந்தவர் போலீசில் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Related Stories: