நாடு தழுவிய போராட்டத்திற்கு இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில் சிஐடியு, தொமுச, ஜாக்டோ-ஜியோ உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் சம்பளம் நிறுத்தம், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் நேற்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இன்று (9ம் தேதி) நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க கூடாது. மீறி பங்கேற்றால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையுடன், நோ வொர்க், நோ பே என்ற அடிப்படையில் இன்று ஒரு நாள் சம்பளம் வழங்கப்படாது என்றும் தெரிவித்திருக்கிறார்.
பொது வேலைநிறுத்தத்திற்கு தமிழகத்தில் பெரும்பாலான சங்கங்கள் ஆதரவு தெரிவித்து இருந்தாலும் கூட, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத அளவிற்கு பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
The post பொது வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றால் சம்பளம் கிடையாது: தலைமை செயலாளர் அறிவிப்பு appeared first on Dinakaran.
