தென் மாவட்ட நெடுஞ்சாலைகளில் 4 சுங்கச்சாவடியில் அரசு பஸ்களை நாளை முதல் அனுமதிக்க கூடாது: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தென் மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் ஜூலை 10ம் தேதி முதல் அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை-கன்னியாகுமரி டோல்வே பிரைவேட் லிமிடெட், கன்னியாகுமரி-எட்டுராவட்டம் டோல்வே பிரைவேட் லிமிடெட், சாலைப்புதூர்-மதுரை டோல்வே பிரைவேட் லிமிடெட் மற்றும் நாங்குநேரி-கன்னியாகுமரி டோல்வே பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தங்கள் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை நீண்ட நாட்களாக செலுத்தாமல் உள்ளது.

நிலுவைத் தொகை இன்னும் ரூ.276 கோடியை செலுத்தாமல் உள்ளது. சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள் பேருந்துகளை நிறுத்தி கட்டணம் வசூலிக்க முடியாத சூழல் உள்ளது. இதுகுறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், போக்குவரத்துக் கழகங்கள், நிலுவைத் தொகையை தீர்க்காமல், பிரச்னையை நீட்டித்துக் கொண்டே இருந்தால், 300 கோடி முதல் 400 கோடிக்கு மேல் உயர்ந்துவிடும். அரசு அதிகாரிகள் இந்த பிரச்னையின் தீவிரத்தை புரிந்துகொண்டு விரைவாக செயல்படவில்லை.

சுங்கச்சாவடிகளில் பேருந்துகளை நிறுத்தி தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால், அவர்களால் அதை செய்ய முடியாமல் போகலாம். போக்குவரத்து கழகங்களின் இந்த நடவடிக்கையால், பொது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தென் மாவட்டங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுராவட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச்சாவடிகள் வழியாக ஜூலை 10 முதல் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை இயக்க அனுமதிக்கக் கூடாது. இந்த சுங்கச்சாவடிகளில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க டிஜிபி உரிய போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post தென் மாவட்ட நெடுஞ்சாலைகளில் 4 சுங்கச்சாவடியில் அரசு பஸ்களை நாளை முதல் அனுமதிக்க கூடாது: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: