லாபத்தில் பங்கு தருவதாக மோசடி புகார் மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர் சவுபின் ஷாகிர் கைது

திருவனந்தபுரம்: கடந்த வருடம் வெளியான மலையாள படமான மஞ்சும்மல் பாய்ஸ் கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் சூப்பர் ஹிட்டாக ஓடியது. பிரபல மலையாள நடிகர் சவுபின் ஷாகிர் இந்தப் படத்தை தயாரித்து நாயகனாக நடித்தார். சவுபின் ஷாகிருடன் இணைந்து அவரது தந்தை பாபு ஷாகிர் மற்றும் ஷான் ஆண்டனி ஆகியோர் இந்தப் படத்தை தயாரித்திருந்தனர். இந்நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறி சவுபின் ஷாகிர் உள்பட படத்தின் தயாரிப்பாளர்கள் தன்னிடமிருந்து ரூ.7 கோடி பணம் வாங்கிவிட்டு ஏமாற்றியதாக சிராஜ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கொச்சி மரடு போலீசுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜரான சவுபின் ஷாகிர், அவரது தந்தை பாபு ஷாகிர் மற்றும் ஷான் ஆண்டனி ஆகியோரை மரடு போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணைக்குப் பின் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

The post லாபத்தில் பங்கு தருவதாக மோசடி புகார் மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர் சவுபின் ஷாகிர் கைது appeared first on Dinakaran.

Related Stories: