சீன வல்லுநர்கள் வெளியேறினாலும் ஐ போன் உற்பத்தியில் பாதிப்பு இல்லை

புதுடெல்லி: பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் அமைத்துள்ள ஐபோன் தொழிற்சாலையில் சீனா நாட்டை சேர்ந்த பலர் பணி புரிந்து வந்தனர். இந்த தொழிற்சாலையில் பணியாற்றிய 300க்கும் மேற்பட்ட சீன தொழில்நுட்ப வல்லுநர்கள் திடீரென சீனா திரும்பிவிட்டனர். இதனால் ஐ போன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என செய்திகள் வௌியாகின. ஆனால் இந்தியாவில் ஐ போன் 17 உற்பத்தி திட்டமிட்டப்படி நடந்து வருகிறது. தற்போது சீன பொறியாளர்கள் செய்த வேலையில் தைவான் நாட்டினர் ஈடுபட்டுள்ளனர் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

The post சீன வல்லுநர்கள் வெளியேறினாலும் ஐ போன் உற்பத்தியில் பாதிப்பு இல்லை appeared first on Dinakaran.

Related Stories: