புதுடெல்லி: சட்டீஸ்கரின் ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜ எப்போதும் திரவுபதி முர்மு மற்றும் ராம்நாத் கோவிந்த்தை நாட்டின் ஜனாதிபதியாக்கியது பற்றி பேசுகிறது. ஆனால் கட்சி இதையெல்லாம் செய்தது நமது சொத்துக்கள், காடுகள் மற்றும் நீர் மற்றும் நிலத்தை பறிக்கவா? என்றார். இது குறித்து பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறுகையில், ‘‘ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஆகியோருக்கு எதிராக அவதூறு வார்த்தைகளை கார்கே பயன்படுத்தினார். இது காங்கிரஸ் கட்சியின் தலித் எதிர்ப்பு, ஆதிவாசி எதிர்ப்பு மற்றும் அரசியலமைப்பு எதிர்ப்பு மனநிலை அதன் டிஎன்ஏவிலேயே இருப்பதை காட்டுகின்றது. குடியரசு தலைவர்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க மற்றும் இழிவான கருத்துக்களை தெரிவித்ததற்காக கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.
The post ஜனாதிபதி குறித்து அவதூறு கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜ வலியுறுத்தல் appeared first on Dinakaran.