ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழில் கடிதம் அனுப்பினால் தமிழிலேயே பதில் அளிக்கப்படும்: நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழு தகவல்

மும்பை: நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவினர், மகாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேற்று சந்தித்தனர். அப்போது, பெறப்படும் கடிதங்களுக்கு கடிதம் எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளதோ அதே மொழியில் பதில் தரப்படும் என்றனர். உத்தரபிரதேச எம்பி தினேஷ் சர்மா தலைமையில் 9 பேர் அடங்கிய நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவினர், மகாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை மும்பையில் உள்ள ராஜ்பவனில் நேற்றுச் சந்தித்தனர். அப்போது, நாடு முழுவதும் கடிதப் பரிவர்த்தனைகளுக்கு அந்தந்த பிராந்திய மொழிகளிலேயே பதில் தர வேண்டும். இந்தி இணை மொழியாக இருக்கும். உள்துறை விவகார அமைச்சகம் இந்தியிலேயே கடிதப் பரிவர்த்தனைகள் மேற்கொள்கிறது. ஆனால், இனி மராத்தியில் பெறப்படும் கடிதங்களுக்கு மராத்தியிலும், தமிழில் பெறப்படும் கடிதங்களுக்குத் தமிழிலும் பதில் தரப்படும் என்றனர்.

The post ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழில் கடிதம் அனுப்பினால் தமிழிலேயே பதில் அளிக்கப்படும்: நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: