கோவை: நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டி ஊரை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகள் பவபூரணி(29). இவர், கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் முதுநிலை மயக்கவியல் துறையில் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி மருத்துவமனையின் கழிவறையில் மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் முதுகலை மருத்துவ மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து 5 நாளில் அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. மேலும், குறிப்பட்ட நேரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்றால் ஆணையம் சிவில் நீதிமன்ற அதிகாரத்தை பயன்படுத்தி நேரில் அல்லது ஒரு பிரதிநிதி மூலம் ஆணையத்தின் முன்பு ஆஜராக சம்மன் அளிக்கப்படும் என எச்சரித்துள்ளது. மாணவி பவபூரணி கழிவறையில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The post மருத்துவ மாணவி உயிரிழந்த விவகாரம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் appeared first on Dinakaran.