ராமநாதபுரம்: சென்னையில் வசித்து வந்த பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (91), உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த 4ம் தேதி காலமானார். இதனையடுத்து அவரது உடல் சொந்த கிராமமான ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள ஆண்டநாயகபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது உடல், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆண்டநாயகபுரத்தில் உள்ள தோப்பில் மனைவி சமாதி அருகே, ஆயுதப் படை போலீசாரின் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
The post பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் உடல் அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் அடக்கம் appeared first on Dinakaran.
