பாட்னா: சமூக ஊடக பிரபலம் மணீஷ் காஷ்யப்புக்கு சுமார் ஒரு கோடி பாலோயர்கள் உள்ளனர். இவர் தமிழ்நாட்டில் பீகாரை சேர்ந்வர்கள் தமிழர்களால் தாக்கப்படுவதாக கூறி போலி வீடியோக்களை வெளியிட்டார். இதற்காக இவரை தமிழ்நாடு போலீஸ் கடந்த ஆண்டு கைது செய்தனர். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக இவர் பாஜவில் இணைந்தார்.
ஆனால் இவருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனைதொடர்ந்து ஜூன் மாதம் வீடியோ ஒன்றை வெளியிட்ட மணீஷ் காஷ்யப் தனது ராஜினாமாவை அறிவித்தார். இந்நிலையில் மணீஷ் காஷ்யப், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். பிரசாந்த் கிஷோர் முன்னிலையில் பாட்னாவில் தனது ஆதரவாளர்களுடன் அவர் கட்சியில் இணைந்தார்.
The post தமிழர்களுக்கு எதிராக வீடியோ வெளியிட்ட சமூக ஊடக பிரபலம் பிரசாந்த் கிஷோர் கட்சியில் இணைந்தார் appeared first on Dinakaran.
