ஓடஓட விரட்டி வெறிச்செயல் திருப்பதியில் பொதுமக்களை சரமாரி கத்தியால் குத்திய சைக்கோ: ஒருவர் பலி; 2 பேருக்கு சிகிச்சை

திருமலை: ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள கபிலதீர்த்தம் சாலையில் கத்தி மற்றும் தடியுடன் சுற்றித்திரிந்த சைக்கோ ஆசாமி திடீரென நேற்று திடீரென ஆவேசமாக கத்தியபடி அங்கு நின்றிருந்தவர்களை நோக்கி பாய்ந்தார். இதனால், அங்கிருந்தவர்கள் அலறியடி ஓடினர். ஆனாலும், வாகன நிறுத்துமிடத்தில் பணிபுரியும் சுப்பிரமணியம்.

அதே பகுதியை சேர்ந்த கல்பனா, சேகர்(55) ஆகியோரை ஓடஓட விரட்டி சரமாரியாக கத்தியால் குத்தி தடியால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் அலறிதுடித்தனர். அங்கிருந்தவர்கள் சைக்கோவை தடுக்க முயன்ற நிலையில், அவர்களையும் அந்த சைக்கோ கத்தியால் குத்த முயன்றார்.

இதையடுத்து கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதற்குள்ள சேகர் பரிதாபமாக உயிரிழந்தார். மீதமுள்ள இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த அலிபிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி சைக்கோவை பிடித்தனர். மேலும் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், பிடிப்பட்ட சைக்கோ வாலிபர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஓடஓட விரட்டி வெறிச்செயல் திருப்பதியில் பொதுமக்களை சரமாரி கத்தியால் குத்திய சைக்கோ: ஒருவர் பலி; 2 பேருக்கு சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: