எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு சென்னை மாநகராட்சியை கண்டித்து அதிமுக 14ம் தேதி ஆர்ப்பாட்டம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகராட்சி, வடசென்னை பகுதியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணிபுரியும் சுமார் 2000 தற்காலிக தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு தூய்மை பணியினை மேற்கொள்வதற்கான ஒப்பந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதனால், தூய்மை பணியாளர்களின் வேலை கேள்விக்குறியாகி உள்ளது.சென்னை மாநகராட்சி, வடசென்னை பகுதியில் தூய்மை பணியினை தனியாருக்கு மாற்ற முனையும் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தின் சார்பில் 14ம் தேதி மாலை 4 மணியளவில், மண்டலம் 4 முதல் டோல்கேட் வரை மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

The post எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு சென்னை மாநகராட்சியை கண்டித்து அதிமுக 14ம் தேதி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: