சென்னை: திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்பியுமான கனிமொழி தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் குடமுழுக்கு விழா, 16 ஆண்டுகளுக்கு பின் இன்று (நேற்று) நடைபெற்று முடிந்திருக்கிறது. இவ்விழாவை, சிறப்புற நடத்திட வழிகாட்டிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும், திருக்கோயில் பெருந்திட்ட பணிகளுக்கு நன்கொடை அளித்த எச்சிஎல் நிறுவனத்திற்கும், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் அறங்காவலர், நிர்வாகிகள், தீயணைப்புத்துறையினர், காவல் துறையினர், சுகாதாரத் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்த தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கை சிறப்பித்த அனைவருக்கும் நன்றி: கனிமொழி எம்பி நெகிழ்ச்சி appeared first on Dinakaran.