திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து

சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெகு சிறப்புடன் நடைபெறுகிறது. வங்க கடலோரம் சூரபத்மனுடன் போர் புரிந்து அவனை வதம் செய்து முருகப்பெருமான் மக்களை காத்து அருள்பாலித்த இடம் திருச்சீரலைவாய். வேண்டி விரதம் இருந்து மனமுருகி கேட்கும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுப்பான் நம் வேலவன். இருள் நீங்கி, மக்களின் துயர் நீங்கி வாழ்வு செழிக்கவும், அடுத்த ஆண்டு மக்கள் விரும்பும் நல்லாட்சி மலரவும் முருகப்பெருமானை வேண்டி வணங்குவோம். வெற்றிவேல்..! வீரவேல்..!

The post திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: