திருச்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. முன்னதாக மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி: பாஜ என்கிற எலிப்பொறியில் மாட்டிக்கொண்டு எடப்பாடி மீள முடியாமல் தவிக்கிறார். அதிமுகவை கபளீகரம் செய்து தங்களை பலப்படுத்தி கொள்ள பாஜ முயற்சி செய்கிறது. அன்வர் ராஜா மட்டுமல்ல, அதிமுகவில் இருக்கும் பல தலைவர்கள் பாஜ உடன் கூட்டணி வைத்ததை ஏற்கவில்லை. ஜெயலலிதா பாஜ உடன் கூட்டணி வைக்க மாட்டோம் என உறுதியாக இருந்தார். ஆனால் தற்போது எடப்பாடி பாஜ உடன் கூட்டணி என தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளார். அதிமுகவை உடைக்க பாஜ முயற்சி செய்கிறது. திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட வேண்டும் என சிலர் விரும்புகிறார்கள். ஆனால் எங்கள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை, உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post அதிமுக கபளீகரம் செய்யப்படுகிறது பாஜ என்ற எலிப்பொறியில் எடப்பாடி மாட்டி தவிக்கிறார்: முத்தரசன் பேட்டி appeared first on Dinakaran.