அந்த அறிக்கைகளின் முக்கிய அம்சங்கள்: ஆரோவில் தாவரவியல் சேவைகள், தமிழ்நாடு மாநில திட்டக்குழுவுடன் இணைந்து சுற்றுச்சூழல் மறுசீரமைப்பிற்காக, மாநிலம் முழுவதும் கைவிடப்பட்ட மற்றும் குறைவாக பயன்படுத்தும் சுரங்கப் பகுதிகளை கண்டறிந்து அவற்றை மதிப்பீடு செய்ய, 40 சுரங்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த ஆய்வுவாயிலாக நிலையான நிலப்பயன்பாட்டு திட்டமிடலை வழிநடத்தவும், சீரழிந்த சுரங்கப் பகுதிகளை சூழலியல் மற்றும் சமூகத்திற்கு நன்மை பயக்கும் நிலபரப்புகளாக மாற்றவும் உதவும். கடுமையான தீவிர ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மிதமான தீவிர ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றின் காரணங்கள் மற்றும் சிகிச்சையில் கவனம் செலுத்துகிறது.
ஆரம்ப கால தாய்ப்பாலூட்டல், குழந்தையின் 6 மாத காலம் வரை தாய்ப்பால் மட்டுமே ஊட்டுதல், சிகிச்சை முறை உணவு, உடலுக்கு உகந்த உணவு முறைகள், குடல் ஆரோக்கியத்தின் முக்கியவத்துவம் குறித்த தகவல்களை இந்த அறிக்கை ஒருங்கிணைத்து வழங்குகிறது. தமிழ்நாட்டில் அதிக அளவில் நகரமயமாதல் மற்றும் நகரங்களில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நகர்ப்புற வெள்ளம், வெப்ப அலைகள், நீர் பற்றாக்குறை மற்றும் பல்லுயிர் இழப்பு உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ளவும், நிலையான நகர்ப்புற மேம்பாட்டிற்கான அவசர தேவையை உணர்ந்து, தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் தமிழ்நாடு நிலப்பயன்பாடு ஆராய்ச்சி வாரியம், சர்வதேச நிறுவனமான ஜெர்மன் கூட்டமைப்பு மற்றும் க்யூப் (ஐஐடி சென்னை) உடன் இணைந்து நகர்புற மீட்டெடுத்தலை மேம்படுத்த ஒருங்கிணைந்த இயற்கை சார் தீர்வு செயல் உத்தி மற்றும் கட்டமைப்பு அறிக்கையை தமிழ்நாட்டில் உள்ள இரண்டாம் நிலை நகரத்திற்காக தயாரித்து வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் காலநிலை மாற்றம் நமது வருங்கால சந்ததியினருக்கு சுகாதாரம், உணவு, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வெப்பநிலையினால், வானிலை மாற்றங்கள், நகர்புற வெப்பத்தன்மை மற்றும் நிலையில்லா வேளாண்மை ஆகிய பாதிப்புகள் ஏற்படுகிறது. தமிழ்நாட்டின் வெப்பத் தணிப்பு உத்தி 2024ன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையானது தமிழ்நாட்டில் உள்ள வட்டார அளவிலான வெப்ப வெளிப்பாடு தொடர்பான விரிவான பகுப்பாய்வை வழங்குகிறது. அதிகரிக்கும் கட்டிட மேற்பரப்பு வெப்பநிலையை அதிகரித்து காலநிலையை பெரிதும் பாதிக்கிறது. சில மாவட்டங்களில் வெப்பநிலை மாநில சராசரியை விட இரண்டு டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது.
இந்த சவால்களை எதிர்கொள்ள, தொடர்ச்சியான வெப்பநிலை கண்காணிப்பு, இயற்கையை அடிப்படையாக கொண்ட குளிரூட்டும் தீர்வுகளை ஏற்றுக்கொள்வது, காலநிலை-உணர்திறன் கொண்ட கட்டிட தொழில்நுட்பங்களை செயல்படுத்துதல் மற்றும் அதிக பாதிப்புள்ள வட்டாரங்களுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றை இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது. வளர்ந்து வரும் வெப்ப அபாயங்களை மிகவும் திறம்பட நிர்வகிக்க வட்டார அளவிலான திட்டமிடலில் உள்ளூர் நில பயன்பாட்டுடன் காலநிலை தரவுகளையும் ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. நிகழ்வின்போது தலைமை செயலாளர் முருகானந்தம், திட்டம் மற்றும் வளர்ச்சி துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, மாநில திட்டக்குழுவின் உறுப்பினர் செயலர் எஸ்.சுதா, மாநில திட்டக்குழுவின் முழு நேர உறுப்பினர் ஜோதி சிவஞானம் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் காலநிலை மாற்றம் வருங்கால சந்ததியினருக்கு சுற்றுச்சூழல், உணவு, பொருளாதாரம் சுகாதாரத்தில் அச்சுறுத்தலாக உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கிய மாநில திட்டக்குழு அறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.
