போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்படவில்லை என்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கிருஷ்ணா தனது மனுவில் கூறியிருந்தார். அதே சமயம், இருவருக்கும் ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்களை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
The post போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் கோரிய மனுக்கள் மீது நாளை தீர்ப்பு! appeared first on Dinakaran.
