சென்னை: திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: பாஜக உடன் கூட்டணி வந்ததும் தமிழ் “பயணம்” இந்தி “யாத்திராவாக” மாறிவிட்டது. எடப்பாடி அப்படித்தான் மாற்றுவார். அதில் நமக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை. மதவெறிகொண்டு மதக் கலவரத்தைத் தூண்ட பாஜக ரத யாத்திரை என்ற பெயரில் ரத்த வேட்டை நடத்தியபோது தடியெடுத்து அதைத் துரத்தி அடித்தது திராவிடம்.
இந்த அரசியல் வரலாறு அடிமைகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு ஒரு அட்வைஸ், அப்படியே உங்கள் கட்சிப் பெயரில், கொடியில் இருக்கும் அண்ணாவின் படத்தை, பெயரை மாற்றிவிட்டு உங்கள் தலைவர் அமித்ஷாவின் படத்தை வைத்து விட்டீர்கள் எனில் சங்கியாக இருக்க பத்து பொருத்தமும் பக்காவா ஆயிடும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
The post பாஜக உடன் கூட்டணி வந்ததும் தமிழ் பயணம் இந்தி ‘யாத்திராவாக’ மாறிவிட்டது: திமுக மாணவர் அணி செயலாளர் கடும் தாக்கு appeared first on Dinakaran.
