×

புதுக்கோட்டை மாவட்டத்தில் 213 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் முகாம்

 

புதுக்கோட்டை, ஜூலை 7: புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தினை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், பெரிய நகரங்கள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் செயல்படுத்தும் பொருட்டு 213 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இம்முகாம்கள் நடத்தப்படுவதற்கு முன்பாக தன்னார்வலர்களால் இல்லந்தோறும் சென்று அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, விண்ணப்பங்கள் மற்றும் பிரசுரங்கள் வழங்கப்படும்.

பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை, மேற்படி விண்ணப்பங்களில் பூர்த்தி செய்து முகாம் நாளன்று வழங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, விண்ணப்பங்கள் மற்றும் பிரசுரங்கள் வழங்கும் பணியினைத் தன்னார்வலர்கள் வரும் 7ம் தேதி அன்று துவங்க உள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர். மேற்கண்ட தகவலை, மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் 213 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் முகாம் appeared first on Dinakaran.

Tags : Pudukkottai district ,Pudukkottai ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...