தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவராக கே.பி.சூரிய பிரகாஷ் நியமனம்

சென்னை: தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக கே.பி.சூரிய பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய பானு ஷிப் அறிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கான மாநிலம் தழுவிய தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 18 வயது முதல் 35 வயது வரையிலான இளைஞர்கள் போட்டியிடவும், வாக்களிக்கவும் அனுமதிக்கப்பட்டது. அதன்படி, நடந்து முடிந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் கே.பி.சூர்ய பிரகாஷ் முதலிடம் பிடித்திருந்தார்.

அதேபோல், 2வது இடத்தில் அருண்பாஸ்கர் மற்றும் 3ம் இடத்திற்கு தினேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக கே.பி.சூரிய பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டுவதாக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய பானு ஷிப் அறிக்கை விடுத்துள்ளார். அதேபோல், அடுத்தடுத்த இடங்களை பிடித்த அருண்பாஸ்கர் மற்றும் தினேஷ் ஆகியோர் முதன்மை துணை தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

The post தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவராக கே.பி.சூரிய பிரகாஷ் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: