அதன்படி திருப்பூர் மாவட்ட வருவாய் அலகில் 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 102 கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் மட்டும் நிரப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கான விண்ணப்பிப்போர் இறுதி வகுப்பு சான்றிதழ் தேர்வில் தமிழ் ஒரு பாடமாக கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் 21 வயது நிறைவு செய்து அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். பணிக்கான விண்ணப்ப படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து உரிய ஆவண இணைப்புகளுடன் சமபந்தப்பட்ட வட்டாட்சியருக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.
