பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவின் காந்தி மைதானம் அருகே உள்ள ட்வின் டவர் குடியிருப்பு பகுதியில் கோபால் கெம்கா என்ற பிரபல தொழிலதிபர் வசித்து வந்தார். பாஜவை சேர்ந்த கோபால் கெம்கா, கடந்த வௌ்ளிக்கிழமை காரில் வௌியே சென்று விட்டு இரவு 11.40 மணிக்கு வீடு திரும்பினார். அவர் காரில் இருந்து இறங்கியபோது, அங்கிருந்த மர்ம நபர்கள் கோபால் கெம்கா மீது சரமாரியாக துப்பாக்கி சுட்டனர். இதில் ரத்த வௌ்ளத்தில் சரிந்த கோபால் கெம்கா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் கோபால் கெம்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி பீகார் டிஜிபி வினய் குமார் கூறுகையில், “இந்த கொலைக்கு பழைய பகை ஏதாவது காரணமாக இருக்கலாம். ஏனெனில் கடந்த 2018ம் ஆண்டு, கோபால் கெம்காவின் மூத்த மகன் குஞ்சன் கெம்கா இதேபோல் வெளியே சென்று விட்டு திரும்பும்போது மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இப்போது 7 ஆண்டுகளுக்கு பின் தொழிலதிபர் கோபால் கெம்கா சுட்டு கொல்லப்பட்டுள்ளார்’ என்றார்.
The post 7 ஆண்டுக்கு முன் மகன் கொல்லப்பட்டதை போல் பீகாரில் தொழிலதிபர் சுட்டு கொலை appeared first on Dinakaran.